அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியானது நிலப்பரப்பிலிருந்து சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் இந்திய ராணுவத்திற்கு மிக முக்கியமானதாகும். சீனா இதை கைப்பற்ற விரும்புவதற்கு இதுவே முக்கிய காரணம்.
சீனாவின் கண்:
சீனாவின் கண்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்கின் மீது நீண்ட காலமாக நிலைத்திருக்கிறது. அதன் படைகள் தொடர்ந்து தவாங்கிற்கு உள்ளே நுழையத் துணிந்தது. அதற்கு இந்திய இராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
ஏன் இந்த கவனம்?:
தவாங் மிகவும் அழகான இடமாகும். இது இயற்கை அழகு மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவின் இந்த புதிய நடவடிக்கை, இந்திய ராணுவத்திடம் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. அதே போல் இந்தியாவுக்கும் இது ஏன் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கேள்வியையும் சேர்த்தே எழுப்புகிறது.
1962 மோதல்:
ராணுவத்திற்கு மிக முக்கியமான, அருணாச்சல பிரதேசத்தின் தவாங் சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் இந்திய ராணுவத்திற்கு முக்கியமானதாகும். இந்த இடம் 1962 இந்தியா-சீனா மோதலுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் போரில் சீனா தவாங்கைக் கைப்பற்றிய பிறகு, அது மக்மஹோன் எல்லைக் கோட்டிற்குள் இருந்ததால் சீனா அதை இந்தியாவிடம் ஒப்படைத்தது.
அப்போதிலிருந்து, சீனாவின் கண் தவாங் மீதிலிருந்து அகலவில்லை. தொடர்ந்த பல முயற்சிகளுக்கு பிறகு தற்போது 3000 சீன வீரர்கள் தவாங் பகுதிக்குள் ஊடுருவத் துணிந்தததையடுத்து இந்திய வீரர்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: இந்தி தெரியாதது ஒரு குத்தமா...இப்படியா அசிங்கப்படுத்துவீங்க...வருந்திய காங்கிரஸ் எம்.பி!!!
இந்தியாவின் எச்சரிக்கை:
1962 போரின் காயங்கள் இன்னும் அழியாமல் உள்ளன. இந்தியா மீண்டும் அதை மீண்டும் பார்க்க விரும்பவில்லை. இதனால்தான் இந்தியா இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் தனது கையை விட்டுப் போவதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக, இதில் சிறப்பு கவனம் செலுத்தி, கட்டுமானப் பணிகளை இந்தியா முடுக்கி விட்டுள்ளது. இதுதவிர இங்கு ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை நம்பவே முடியாது என்ற இந்தியாவின் அச்சத்தால் புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
-நப்பசலையார்
இதையும் படிக்க: பிரதமரின் நல்லாட்சி பாதையும்... மீட்கப்பட்ட கறுப்பு பணமும்...