நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் சிவங்கங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் ப.சிதம்பரம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு பாதுகாப்பு பிரிவிலும் உள்ள பெண் போலீஸ் அதிகாரிகள் எண்ணிக்கை எவ்வளவு என கேள்வி எழுப்பினார். மேலும் பெண் அதிகாரிகளை அதிக அளவில் பணி அமர்த்த அரசு ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளாதா? எனவும் எழுத்து பூர்வமாக அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் நித்யனந்த் ராய், காவல்துறையில் பெண்களை அதிக அளவில் நியமிப்பது மாநில மற்றும் யூனியன் அரசுகளின் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 3 பெண் காவல் துணை காவல் ஆய்வாளர் மற்றும் 10 பெண் காவலர்கள் பணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் காலியாக உள்ள ஆண் போலீசார் பணியிடங்களில் கூடுதலாக பெண் காவலர்கள் மற்றும் ஆய்வாளர்களை நியமனம் செய்ய அனைத்து மாநில மற்றும் யூனியன் அரசுகளை மத்திய அரசு அறிவுறுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.