பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA கூட்டணியை உருவாக்கி பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையில் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு, வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இதையும் படிக்க : சென்னை: இணையதளம் இயங்காததால் தாமதமான விமான சேவை!
அந்தவகையில், பிரதமர் மோடி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரசுக்கு ஆதரவாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த மாநில கட்சிகளும் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமா் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.