புற்றுநோய் மற்றும் அரிய நோய்களுக்கான மருந்து பொருட்களுக்கு ஜிஎஸ்.டியில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 50-வது ஜி.எஸ்.டி. கூட்டம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்:-
குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் வரை ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், அரிய வகை நோய்களுக்கான மருந்துகள், மற்றும் மருத்துவ நோய்களுக்கான உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.
இதேபோல், சமைக்கப்படாத மற்றும் வறுக்கப்படாத சிற்றுண்டி தட்டுகளுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
செயற்கை ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும் எனவும் பருத்திக்கு பழைய ஜிஎஸ்.டி நிலுவை வரி ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கபட்டது.
இதையும் படிக்க | தக்காளியின் தாக்கமே இன்னும் ஓயவில்லை ,... அதற்குள் ஷாக் கொடுக்கும் சின்ன வெங்காயத்தின் விலை..!