இந்தியா

அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் மீட்பு...

இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை, அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஒரு பாகிஸ்தானிய ட்ரோன் நுழைவதைக் கண்டுபிடித்து அதனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அம்ரித்சர் மாவட்டத்தின் ஒரு விவசாய நிலத்தின் மேல்பரப்பில் பறந்து கொண்டிருந்ததாக அந்த ட்ரோன் குறித்து பி.எஸ்.எஃப் தெரிவித்துள்ளனர்.

நேற்று கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, பி.எஸ்.எஃப் அதிகாரிகள், இரவு 7:40 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இது குறித்து தகவலறிய சென்ற பாதுகாப்பு படையினர், ட்ரோனை கண்டுபிடித்து மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். நான்கு இறக்கை கொண்ட இந்த ட்ரோன், எல்லை வேலிக்கு முன்புள்ள விவசாய நிலங்களின் பறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சம்பவம் இது முதன் முறையல்ல. கடந்த டிசம்பர் 21, நவம்பர் 26 போன்ற தேதிகள் கூட இது போன்ற அத்துமீறி நுழைந்த ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், அவற்றை மீட்டு விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த ட்ரோன் கண்டுபிடிப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.