பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பாண்டின் இறுதியில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்த பாஜக மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், அஸ்வினி வைஷ்ணவ், மற்றும் தேர்தல் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக ஜி 20 உச்சி மாநாட்டிற்குப் பிறகு முதல் முறையாக கட்சி அலுவலகத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர்களும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த கூட்டத்தில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.