இந்தியா

"பரபரப்பு" எறிந்த போன கூடாரம்.. வாக்கு இயந்திரத்தை உடைத்து கைகலப்பில் ஈடுபட்ட பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்

மேற்கு வங்கத்தில், உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கும் - திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. 

Malaimurasu Seithigal TV

மேற்குவங்கத்தில் உள்ள 108  நகராட்சிகளுக்கு  உட்பட்ட 2 ஆயிரத்து 171 வார்டுகளுக்கும், இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கென அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு பூத்களிலும் தலா ஒரு ஆயுதம் ஏந்திய காவலர் உள்பட  44 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில்  வேட்பாளர்கள்  களமிறக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையானது வருகிற மார்ச் 2ம் தேதி நடைபெறவுள்ளது. 

இந்தநிலையில், மிட்னாப்போர்  நகராட்சிக்கு உட்பட்ட  வார்டு எண் 163 அருகே பாஜகவினர் கூடாரம் போட்டிருந்ததாகவும், இதனை நல்லிரவும் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த சிலர் சுட்டெரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலையில், பத்பரா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்கு இயந்திரத்தை கீழே போட்டு உடைத்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டு, வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், கலவரத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.