பில்கிஸ் பானு விவகாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மட்டும் குஜராத் அரசு விடுதலையை பரிந்துரை செய்தது ஏன் என பில்கிஸ் பனோ வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பனோ என்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவர்தம் குடும்பத்தினர் 15 பேரைக் கொன்ற வழக்கின் 11 பேரை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுவித்தது.
இதனை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆயுள் தண்டனையை முழுமையாக அனுபவிப்பதற்கு முன் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது ஏன் எனவும் 14 ஆண்டுகள் சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகள் ஏன் விடுவிக்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
விடுதலையை பரிந்துரைத்த சிறைத்துறை ஆலோசனைக்குழுவிடம் அறிக்கை கேட்டு, வழக்கை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜி வழக்கு; சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!