இந்தியா

டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை! உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு!

பட்டாசு 'தயாரிக்க விற்க வெடிக்க' டெல்லி அரசு தடைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு;வழக்கின் விசாரணை அக்டோபர் 7ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

டெல்லி: உலக அளவில் கடுமையான காற்று மாசுபாடு உள்ள நகரங்களின் பட்டியலில் தலைநகர் டெல்லி முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் தீபாவளி, தசரா (நவராத்திரி) உள்ளிட்ட பண்டிகைகள் வட மாநிலங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசுகள் அதிகமாக வெடிக்கும் நேரம் இது.

இதனால், டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினால், செப்டம்பர் 7ம் தேதி டெல்லி சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் 2023 ஜனவரி 1ம் தேதி வரை தடை விதித்து. இந்நிலையில் டெல்லி அரசின் தடை உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டபோது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கின் நோக்கம் என்ன என்பதை மனுதாரர் அறிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினர். மேலும், வழக்கை அக்டோபர் 7ம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கூறியுள்ளார். 

கடந்த ஆண்டுகளிலும் இதே போல் டெல்லி அரசு விதித்த பட்டாசு தடைக்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பசுமை பட்டாசுக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் விதிவிலக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.