இந்தியா

இந்தியாவின் புதிய முப்படை தளபதியாக யாரை அறிவித்துள்ளது மத்திய அரசு...!

Tamil Selvi Selvakumar

இந்தியாவின் புதிய முப்படைத் தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினட் ஜெனரல் அனில் சவுகானை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய முப்படை தளபதி:

இந்திய பாதுகாப்பு படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  8-ஆம் தேதி குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், 10 மாதங்களுக்கு பிறகு இந்தியாவின் புதிய முப்படை தளபதி நியமனம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய பாதுகாப்பு முகமையின் ஆலோசகராக உள்ள அனில் சவுகான், இந்தியாவின் புதிய முப்படை தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த அனில் சவுகான், கூர்கா ரைஃபிள் படையில் 1981-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் அங்கோலாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவராகவும் பணியாற்றி உள்ளார்.  இவரது மேம்பட்ட பணிக்காக  2018-ஆம் ஆண்டு உத்தம் யூத் சேவா பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது. இதேபோல், பரம் வஷிட் சேவா பதக்கம் கடந்த 2020-ஆம் ஆண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மனோஜ் முகுந்த நரவனேவுக்கு பிறகு 2019-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்திய ராணுவ செயல்பாடுகளின் பொதுத் தலைவராகவும் இவர் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.