விமானப்படை தினத்தையொட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் பாராசூட் மற்றும் விமானம் மூலம் வானில் வர்ணஜாலம் காட்டி வீரர்கள் அசத்தினர்.
91-வது இந்திய விமானப் படை தினம் ஆக்டோபர் 8-ந் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரக்ராஜ் பகுதியில் விமானப்படை வீரர்களின் சாகசங்கள் நடைபெற்றது. போர் விமானங்கள் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டிருந்த அந்த வளாகத்தில் இருந்து பாராசூட் மூலம் வானில் பறந்தபடி வீரர்கள் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர். தனித்தனியாகவும், ஒன்றன்மீது ஒன்றாகவும் பாராசூட்டில் வீரர்கள் விண்ணில் பறந்தபடி அசத்தினர்.
இதேபோல், குறைந்த நேரத்தில் உதிரி பாகங்களை கொண்டு வாகனங்களை உருவாக்கியதுடன், அதனை இயக்கியும் வீரர்கள் அசத்தினர். தொடர்ந்து, பல்வேறு வாத்தியங்களை இசைத்தவாறு விமானப்படை வீரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அணிவகுப்பு நடத்தினர்
இதையும் படிக்க: "காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர தி.மு.க அரசுக்கு திராணி இல்லை" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்