இந்தியா

குற்றம் சாட்டப்பட்டவருக்கு 'மனசாட்சி இல்லை'.... மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்!!

Malaimurasu Seithigal TV

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் டெல்லி போலீசார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், உத்தரப்பிரதேச எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன. இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உட்பட ஒட்டுமொத்த மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி துாக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவரான பிரிஜ் பூஷனை மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் விமர்சித்துள்ளார்.  உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த வீரர்களுக்காக இவர் வாதாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அவருடைய ட்விட்டர் பக்கத்தில் , “மல்யுத்த போராட்டம்: மின்சாரம், தண்ணீர் துண்டிக்கப்பட்டது.  ஆனாலும் அவர்கள் போராடி வெற்றி பெறுவார்கள்.  ஆனால் குற்றஜ்சாட்டப்பட்டவருக்கு மல்யுத்தம் செய்யும் போது மனசாட்சி இல்லை.” எனப் பதிவிட்டுள்ளார்.

-நப்பசலையார்