பெங்களூரு வெளிவட்ட சாலையில் கட்டுமானப் பணியில் இருந்த மெட்ரோ தூண் இடிந்து விழுந்ததில் பெண் மற்றும் அவரது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூண் விபத்து:
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குள்ள வெளிவட்டச் சாலையில் கட்டுமானப் பணியில் இருந்த மெட்ரோ ரயிலின் தூண் விழுந்ததில் ஒரு பெண்ணும், அவரது இரண்டரை வயது மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காவல் அதிகாரிகளின் கூற்றுப்படி, காலை 11 மணியளவில் தூண் அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட TMT ரீபார் ஸ்கூட்டர் மீது விழுந்ததில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக கூறியுள்ளனர்.
விசாரணை:
தூணின் உயரம் 40 அடிக்கும் அதிகமாகவும், பல டன் எடை கொண்டதாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் இறந்தவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊழல் காரணமா?:
பெங்களூருவில் மெட்ரோ ரயில் தூண் இடிந்து விழுந்ததற்கு கருத்து தெரிவித்த கர்நாடக காங்கிரஸ்
தலைவர் டிகே சிவகுமார் ”இந்த சம்பவம் '40% கமிஷன்' அரசின் முடிவு. வளர்ச்சிப் பணிகளில் தரம் இல்லை. இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். எல்லா இடங்களிலும் ஊழல் அதிகரித்து வருகிறது.” என்று கூறியுள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: மாணவர்களை மயக்கமடைய செய்த மதிய உணவு....உணவில் பாம்பிருந்ததா?!!