இந்தியா

விரைவில் இந்தியாவிற்கு 6ஜி சேவை அறிமுகமாகும்!! 5ஜி வெளியாவதிற்குள்ளாகவே 6ஜி பற்றிய அடுத்த செய்தி!..

Malaimurasu Seithigal TV

வேகமான இணைய சேவை அவசியமானது என்று பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள் என்ற பிம்பம் இந்தியாவில் கட்டமைக்க பட்டுள்ள நிலையில் வெறும் 61.7 % மக்கள் தான் இணைய சேவையை பயன்படுத்துகிறார்கள் என்றும் அதிலும் பெரும்பாலானோருக்கு 4ஜி சேவையே தேவைக்கு அதிகமானதாக தான் இருக்கிறது என்ற கருத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் 5ஜி சேவை இந்தியாவிற்கு மிக அத்தியாவசியமானது என்றும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறுவதற்கு இது அவசியமான அளவுகோள் என்பதாலும் 5ஜி இணைய சேவை விரைவில் மக்களுக்கு கிடைக்கப்பெறும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்து இருந்தது. இதையொட்டி ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) உள்ளிட்ட மொத்தம் 13 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதிபெற்று கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5G சோதனைகளை நடத்தி வந்தன. 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நவம்பர் 2021ஆண்டிற்குள் 5G சோதனைகளை முடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சோதனைகளை தொடர்வதற்கு மார்ச் 2022 வரை கூடுதல் அவகாசத்தை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்  (TRAI) அனுமதி அளித்ததுடன் 5G ஸ்பெக்ட்ரம் புதிய அடிப்படை விலையை பிப்ரவரி அல்லது மார்ச் 2022 ஆண்டின் இறுதிக்குள் பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்துள்ளது. புதிய விலைப்பட்டியல் நிர்ணயம் செய்த அடுத்த சில நாட்களிலேயே 5G அஅலைவரிசை பேண்ட்களுக்கான ஏலம் நடத்தப்பட்டு  5ஜி சேவை 15 ஆகஸ்ட் 2022 சுதந்திர தினத்தன்று தொடங்குவதற்காண வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரியவருகிறது.

ஃபைனான்சியல் டைம்ஸ் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட வெபிணாரில் கலந்துகொண்ட மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ண இத்தகவல்களை வெளியிட்ட பின்னர் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 6ஜி நெட்வொர்க்குகள் இந்தியாவில் வெளியிடப்படும் என தெரிவித்தார். 6ஜி மேம்பாட்டிற்கு தேவையான அனுமதிகளை மத்திய அரசு முன்னதாகவே அறிவித்துவிட்டதாகவும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்த அவர் 6ஜி நெட்வொர்க்குகளை இயக்க தேவையான டெலிகாம் மென்பொருள் நாட்டிலேயே உருவாக்கப்படும் எனவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்கள் உலக அளவில் சந்தைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரத்தின் உயர்வு மக்களின் வாழ்க்கை முறையில் எவ்வகையிலும் பிரதிபலிப்பதில்லை என்ற போதிலும் 5ஜி 6ஜி போன்ற ஆடம்பர தொழிற்நுட்ப முன்னேற்றத்திற்கான திட்டங்கள் உண்மையில் மக்களின் முன்னேற்றத்திற்காகவா அல்லது முதலாளிகளின் முன்னேற்றத்திற்காகவா என்ற கேள்வி எழுந்துகொண்டு தான் இருக்கிறது 5ஜி அதி வேகமான இணைய வசதியை நமக்கு அளிக்கும் என்றாலும் அதுனுடன் சேர்ந்து ஆரோக்கியத்திற்கும் அதிகளவிலான கேடுகளை விளைவிக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது இதனை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலானோர் இப்படிப்பட்ட தொழிற்நுட்ப வசதிகளை ஆதரிக்கிறார்கள் என்றும் இதன் மூலம் சாதகத்தைவிட பாதகமே அதிகம் உள்ளது என்றும் 1984இல் மிஸ் இந்திய பட்டம் பெட்ரா ஜூஹிச்சாவ்லா போன்ற பல சமூகம் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் 5ஜியை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். 

சிட்டுக்குருவி மரணிக்கிறது என்று கைபேசி பயன்பாட்டை நிறுத்திவிடவில்லை அதேபோல் கண்ணனுக்கு தெரியாத கதிர்வீச்சு பாதிப்பை உண்டாகும் என்பதற்காக நாம் 5ஜியை எதிர்க்கப் போவதில்லை இதை பார்க்கும் பொது கோழி மீது பரிதாப பட்டாள் 65 சாப்பிட முடியுமா என்ற வாக்கியம் தான் நினைவிற்கு வருகிறது.