இந்தியா

குஜராத் கலவர வழக்கு 35 பேர் விடுதலை!

Malaimurasu Seithigal TV

கோத்ரா கலவர வழக்கில் இருந்து, இந்து அமைப்பைச் சேர்ந்த 35 பேரை விடுதலை செய்து குஜராத்தின் பஞ்ச மஹால் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

2002ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டு 59 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் கலோல், டெடோல் உள்ளிட்ட பகுதிகளில் 3 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக 52 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் 17 பேர், வழக்கு விசாரணையில் இருந்தபோதே உயிரிழந்த நிலையில், மீதியிருந்த 35 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹலோல் மாவட்டத்தில் உள்ள பஞ்சமஹால் கூடுதல் நீதி மன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கு ஜூன் 12ஆம் தேதி நிறைவுற்றது. இதைத்தொடர்ந்து நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பில்  எவ்வித அடிப்படை சாட்சியும் இல்லை எனக்கூறி 35 பேரும் விடுலை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.