இந்தியா

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது இன்றுமுதல் 3 நாட்கள் விவாதம்!!

Malaimurasu Seithigal TV

மணிப்பூர் கலவரம் குறித்து பதிலளிக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடிக்கு நெருக்கடிகள் கொடுக்கும் வகையிலும், எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று முதல் 3 நாட்கள் விவாதம் நடைபெற உள்ளது. 

நாடாளுமன்ற மழைக்காக கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மணிப்பூர் கலவரம்,  அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாகக்கூறி எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மணிப்பூர் கலவரம் தொடர்பாக பதில் அளிக்காத பிரதமருக்கு எதிராக, எதிர்கட்சியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எம்பி ராகுல் காந்தி உரையாற்றுகிறார். காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்துள்ள இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை இண்டியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன. 

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி வரும் 10 ஆம் தேதி பதிலளிக்கவுள்ள நிலையில், இன்று நடைபெறும் விவாதத்தில் ராகுல் காந்தி விவாதிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.