இந்தியா

நிறுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள்...!!!

Malaimurasu Seithigal TV

2019-ஆம்ஆண்டிலேயே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவந்த் கிஷன் ராவ், புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் திட்டம் எதுவும் தற்போது மத்திய அரசிடம் கைவசம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக, 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்து விட்டதாக மத்திய அரசு அறிவித்தது.  அதனைத் தொடர்ந்து , 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன.  இருப்பினும் தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவிலேயே புழக்கத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.  இது குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் 2019-ஆம்ஆண்டிலேயே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.