நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அதே பகுதியில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில் ராமலிங்கத்திற்கு 2 ஆண் பிள்ளைகள் மட்டுமே உள்ளனர். பெண் குழந்தை இல்லாததால் கமலி என்ற பெயரில் நாய் ஒன்றை கடந்த 3 வருடங்களாக வளர்த்து வருகிறார்.
இந்த நாய் தினமும் வீட்டின் வெளியே நின்று சாலையை கடந்து செய்தித்தாள் போடுபவரிடம் இருந்து செய்தித்தாளை வாங்கிக்கொண்டு, மீண்டும் சாலையின் இருபுறமும் பார்த்துவிட்ட கடந்து வந்து உரிமையாளரிடம் செய்தித்தாளை வழங்குகிறது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது மட்டுமின்றி கமலி நாய் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற பல்வேறு பணிகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது.
வைரல் வீடியோ : https://youtube.com/shorts/hmJy_1H90uA?feature=share