சிங்கம் ,சிறுத்தை உள்ளிட்ட ஆபத்தான காட்டு விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருவது வளைகுடா நாடுகளில் சகஜமான ஒன்றாக கருதப்படுகிறது.காட்டையே அச்சுறுத்தி வரும் சிங்கங்கள் அதன் உரிமையாளரை கண்டால் பூனையாக மாறிவிடுவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் குவைத் நாட்டில் சிங்கம் ஒன்று தெருவில் சுற்றித் திரிந்த படி இருந்துள்ளது.அதனை பயமில்லாமல் சிறுமி ஒருவர் அலேக்காக தூக்கி செல்லும் காட்சியை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஒரு சிறுத்தை குட்டியின் விலையானது 6 ஆயிரம் டாலர்கள் வரை அதாவது அதனை இந்திய மதிப்பில் சொல்லப்போனால் 4.5 லட்சம் என்கின்றனர்.இதனை செல்லப்பிராணியாக வளர்க்க அவர்கள் விலை கொடுத்து வாங்குவதன் மூலம் அதனை வீட்டிலேயே சாதரணமாக வளர்த்தும் வருவதாக கூறியுள்ளனர்.
இதனிடையில் தற்போது குவைத்தில் உள்ள சாபியா என்ற பகுதியில் ஒரு வீட்டில் வளர்த்து வரும் சிங்கம் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.இது குறித்து அதன் உரிமையாளர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.இந்த நிலையில் அந்த சிங்கக்குட்டியை வளர்த்த சிறுமி, அந்த சிங்கம் சாலையில் சுற்றித்திரிவதை கண்டு அதனை குழந்தையை தூக்குவது போல தூக்கிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.