வைரல்

பிரேக்கப் குறித்து எழுந்த கேள்விக்கு - தந்தை ஸ்டைலில் பதிலடி கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்...

இதுவரை எத்தனை முறை பிரேக்கப் என லைவில் கேள்வி எழுப்பிய நபருக்கு தக்க பதிலடி கொடுத்த ஸ்ருதி.

Malaimurasu Seithigal TV

தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலக நாயகனுக்கு இரு மகள்களில் ஒருவரான ஸ்ருதிஹாசன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த 7 ஆம் அறிவு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர்.மேலும் இவர் குழுந்தை நட்சத்திரமாக சிறு வயதில் இருந்தே இருந்துள்ளார்.

இவர் கமல் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் படத்தில் தனது 6 வயதிலேயே ஒரு பாடலை பாடியுள்ளார்.இவர் 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னதாக பல படங்களில் நடித்து வந்தார்.இதற்கு முன்னதாக 2009 ஆம் ஆண்டில் வெளியான லக் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் கால் பதிக்க தொடங்கினார்.இறுதியாக அவர் நடித்து வெளிவந்த படமாக சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 3 குறிபிடத்தக்கது.

பின்னர் இவரை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை.நடிகை ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த இசைகலைஞர் மைக்கல் கார்சல் இருவரும் காதலித்து வந்தனர்.இவர்கள் காதல் குறித்து ஸ்ருதி ஹாசனின் தந்தையான கமலஹாசன் ஒரு திருமண விழாவின் போது தனது மகளின் காதலனை அனைவரின் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார்.மேலும் இருவரையும் மாலை மாற்றிக் கொள்ளுமாறு கூறியுள்ளார் உலக நாயகன்.தந்தையின் பேச்சை மறுத்த ஸ்ருதி மாலை மாற்றிக் கொண்டதாக சொல்லப்பட்டது.

காதலை பிரிந்த ஸ்ருதி சிறிது காலம் மன வேதனையில் இருந்துள்ளார்.தற்போது அந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்த ஸ்ருதி கடந்த சில மாதங்களாக சான்டனு ஹசாரிக்கா என்பவருடன் சுற்றி கொண்டு வருகிறார்.அவர் Doodle Art எனப்படும் ஓவிய கலையில் கைதேர்ந்தவராவார் என்பது குறிபிடத்தக்கது.மேலும் சமீப காலமாக இவருடன் தான் ஸ்ருதி இருந்து வருகின்றார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அடிக்கடி தன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடியோ மூலம் பதிலளித்து பதிவிடுவார்.அதே போல தற்போது ஒருவர் இதுவரை உங்களுக்கு எத்துனை பிரேக்கப் என கேட்டுள்ளார்.அதற்கு ஸ்ருதி ஹாசனோ உனக்கு எத்துனை காதலி இருந்துருப்பார்கள்,என கேட்டு அவரே அதற்கு பதிலாக 0 அல்லது 1/2 இருந்து இருப்பார்கள்,என்பதை கூறி உனக்கெல்லாம் காதலியே இருக்க வாய்ப்பில்லை என்பதை போல தனது தந்தை ஸ்டைலில் நக்கல் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.