ஆளுநரின் தாய் மற்றும் நடிகை குஷ்பூ குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக எழுந்த கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து முன்னாள் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர்.
சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, பெண்களை அவதூறாக பேச திமுகவினருக்கு யார் உரிமை கொடுத்தது என வினவினார். திமுகவினர் தொண்டர்கள் பெண்களை இழிவுபடுத்தி பேசுவது தான் திராவிட மாடலா ? என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது. இதனைதொடர்ந்து சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | நீட் தேர்வு முடிவுகள் சமூக நீதிக்கு எதிரானது...ரத்து செய்வதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஓபிஎஸ்!