திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திருட்டு வழக்கில் வாய்தாவிற்காக வந்திருந்த நபர் மதுபோதையில் ரகளை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செங்கம் பகுதியை சேர்ந்த தினகரன் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு செங்கம் போலீசார் இருசக்கர வாகன திருட்டில் கைது செய்த நிலையில், தற்போது செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடந்து வருகின்றது.
இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இன்று வாய்தாவிற்க்காக வந்திருந்த தினகரன் மது அருந்திவிட்டு நீதிமன்றத்தின் உள்ளேயே சரமாரியான கேள்விகளை எழுப்பி போலீசாரிடம் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டார்.
அப்பொழுது மது போதையில் இருந்த தினகரன், நான் திருடன் தான். உங்களால் முடிந்தால் என்ன செய்வீர்கள்? என் நெஞ்சிலே சுடுவிங்களா? சுடுங்கள் என்று காவல்துறையினரை பார்த்து தகாத வார்த்தையை கூறி ரகளையில் ஈடுபட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் இருந்த போலீசார், செங்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் பின்னர் விரைந்து வந்த செங்கம் போலீசார், தினகரனை இழுத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் உள்ளே இருந்த போலீசாருக்கு சவால் விட்டு ரகளையில் ஈடுபட்ட தினகரன், செங்கம் போலீசாரை கண்டு பொட்டி பாம்பாக அடங்கி வாய் பேசாமல் அமைதியாக அவர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்றார்.
இதையும் படிக்க: நடிகை வீட்டில் டிவி திருட்டு....திருட்டு டிவி-யை கொண்டுசெல்ல, காரை திருடிய திருடர்கள்!