வைரல்

மாண்டஸ் புயல் எதிரொலியாய் வீடுகளுக்குள் மழை நீர் கடும் அவதி .....

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மா நகர்,பாரதியார் நகர், அம்பேத்கர் நகர்,சிப்பாய் நகர்,உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீரானது புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

மாண்டஸ் புயல் எதிரொலியாக நேற்று நள்ளிரவு முதல் பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வந்தது.இதனால் ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் பொதுமக்கள் மகுந்த இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மா நகர்,பாரதியார் நகர், அம்பேத்கர் நகர்,சிப்பாய் நகர்,உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீரானது புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேங்கி இருக்கக்கூடிய மழை நீரை அப்புறப்படுத்துவதற்காக நகராட்சி அதிகாரிகள் பழுதடைந்த மின் மோட்டார்களை கொண்டு தண்ணீர் எடுப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வருகின்றனர்.
பழுதடைந்த மின் மோட்டாரினால் மழைநீரை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக வேதனை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மழை நீர் செல்வதற்காக மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது செய்த கனமழையால் இந்த மழை நீர் கால்வாயில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியிலே மழை நீரானது தேங்கி இருக்கக்கூடிய ஒரு அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி இருக்கக்கூடிய மழை நீரில் கழிவு நீரும் கலந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். ஆகவே விரைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி இருக்கக்கூடிய கழிவுநீரை நகராட்சி அதிகாரிகள் விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.