வைரல்

மதுரையில் விநோத கறி விருந்து... 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்பு! 

ஆண்கள் மட்டுமே பங்குபெறும் அசைவத்திருவிழா நேற்று மதுரையில் வெகு விமர்சனமாக நடைபெற்றது. 

Malaimurasu Seithigal TV

அனுப்பபட்டி என்ற கிராமம் மதுரை திருமங்கலம் அருகே உள்ளது .இங்கு காலதெய்வம் கருப்பையா முத்தையாகோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறும். இந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்க மாட்டார்கள். ஆண்கள் மட்டும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. 

இந்த திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டன. பின்னர் கறிகளை சமைத்து கறி விருந்து படையல் செய்யப்பட்டு ஆண்கள் மட்டும் சாப்பிட்டனர். கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள் இதில் கலந்துகொண்டனர்.

இலை விருந்து முடிந்தவுடன் இலையை எடுக்க மாட்டார்கள். இலை காய்ந்தபின்பு தான் பெண்கள் அந்த பகுதிக்கு செல்லவேண்டும். இந்த விநோத திருவிழாவில் சுற்றுப்புற கிராம மக்கள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.