பல வகையான திருடர்களை நாம் பார்த்திருப்போம். செயின் பறிப்பவர்கள், பர்ஸ் திருடர்கள், பிக்பாக்கெட்டுகள் என அபல் அவகையான குற்ற்றங்களை செய்யும் திருடர்களைப் பார்த்து கோபமடைந்து வெறுப்படைந்த நாட்களெல்லாம் சென்று விட்டது. தற்போது திருடர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.
ஏன் என்றால், தற்போது, இதையெல்லாமா திருடுவார்கள் என முகம் சுளிக்கும் வகையிலும், அவர்களைப் பார்த்து, “ஐயோ பாவம்” என பரிதாபப்படும் வகையிலும், கண்டதையெல்லாம் திருடி வருகின்றனர். அந்த விசித்திர திருட்டு வரிசையில், “பாப் கார்ன்” திருடர்கள் “பாப்” ஆகியுள்ளனர்.
சென்னை பல்லாவரம் அருகே, அனகாபுத்தூரில் அமைந்துள்ள வெல்கோ சினிமாஸ் எனும் மள்டிப்ளெக்ஸ் தியேட்டரில் தற்போது “லவ் டுடே” என்ற படம் வெளியாகியுள்ளது. இளைஞர்கள் கூட்டம் அலைமோதி வரும் இந்த படத்திற்கு வந்துள்ள 4 இளைஞர்கள், படத்திற்கு மத்தியில் பாப் கார்ன் ஆர்டர் செய்துள்ளனர்.
4 பாப்கார்ன்-களை ஆர்டர் செய்துவிட்டு, அதோடு சேர்த்து மேலும் ஒரு பாப்கார்னை லாவகமாக திர்டி சென்றதை ஊழியர்கள் கவனிக்கவில்லை. ஆனால், எதார்த்தமாக சிசிடிவி காட்சிகளை கவனித்த போது இந்த செயல் 4K வில் சிக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் படிக்க | சிவாஜி கணேசன் மகள்கள் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி...
ஆத்திரமடைந்த தியேட்டர் ஓனர், தனது ட்விட்டரில், இதனை குறித்து ஒரு பதிவிட்டு, நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பதிவில், “திருடர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 1 பாப்கார்ன் இலவசம்” என பதிவிட்டுள்ளனர். அதனுடன் சிசிடிவி காட்சிகளையும் இணைத்து பதிவிட்டிருக்கிறார்.
கடந்த 5ம் தேதி ஏற்கனவே ஒரு முறை பாப்கார்ன் திருடப்பட்டதாக தகவல்கள் கூறுவதையடுத்து, இந்த திருட்டை எதிர்க்க, நிறுத்தவும் தான் புதிதாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தியேட்டர் ஓனர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.