கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தான் நடைபெற உள்ள தேர்தலில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ் சார்பில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பிரசாரம் செய்ய ராகுல் காந்தி அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அழைப்பை தற்போது கமல்ஹாசன் ஏற்றுள்ளார். அதன்படி கமல்ஹாசன் கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதனையடுத்து, மே மாதம் முதல் வாரத்தில் கமல்ஹாசன் கர்நாடகாவில் தீவிர பிரசாரம் செய்ய இருக்கிறார். கர்நாடகாவில் பெங்களூரில் ஏராளமான தமிழர்கள் உள்ளனர். குறிப்பாக பெங்களூர் சிவாஜிநகர், காந்தி நகர், சாம்ராஜ்பேட்டை, ராஜாஜிநகர், ஆர்ஆர் நகர், புலிகேசி நகர் உள்பட பல தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் அளவில் தமிழர்கள் வசிக்கின்றனர்.
இதையும் படிக்க } விளையாட்டு போட்டியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும்...!!