வைரல்

ஓட்டல்களில் இனி கத்தரிக்காய் பயன்படுத்த கூடாது...உணவு பிரியர்கள் ஷாக்! 

கர்நாடகா மாநிலத்தில் பல உணவகங்களில் உள்ள மெனு கார்டில் இருந்து கத்தரிக்காய் சம்மந்தப்பட்ட உணவு பொருட்கள் நீக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

கர்நாடகா மாநிலத்தில் பல உணவகங்களில் உள்ள மெனு கார்டில் இருந்து கத்தரிக்காய் சம்மந்தப்பட்ட உணவு பொருட்கள் நீக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஏழை எளிய மக்கள் தொடங்கி பணக்காரர்கள் வீடுவரை கத்தரிக்காய் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு காய்கறியாகும். கர்நாடகா போன்ற வட பகுதிகளில் எல்லாம் கத்தரிக்காய் தான் பலரது வீடுகளிலும் அன்றாட உணவாக இருந்து வருகிறது.

மழைக்காலம் தொடங்கி உள்ளதால் கத்தரிக்காய் ,முட்டைக்கோஸ்,தக்காளி, குடமிளகாய் போன்ற காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் மழை காரணமாக கத்தரிக்காய் விலையும் ஒரு கிலோ 200 முதல் 220 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளாகி உள்ளனர்.

வாங்கிபாத், யெங்காய் ஆகிய கத்தரிக்காயை பயன்படுத்தி செய்யப்படும் உணவு வகைகளை வட கர்நாடக பகுதிகளில் அதிகம் மக்களால் ரசித்து ருசித்து உண்ணப்படும் உணவாக உள்ளது.இந்த காரணத்தினால் கர்நாடகா மாநிலத்தில் பல உணவகங்களில் உள்ள மெனு கார்டில் இருந்து கத்தரிக்காய் சம்மந்தப்பட்ட உணவு பொருட்கள் நீக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் உணவு  பிரியர்கள் கவலையில் உள்ளதாக ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.