கர்நாடக மாநில சட்டமன்ற தெரிதல் நெருங்கி வரும் வேளையில், தீர்த்தசால் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கங்காதரய்யா கவுடா வீடுகளில் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்றேடு வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கங்காதரய்யா கவுடா வீடு மற்றும் அவரது கல்வி நிலையம் என மூன்று இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தக்சின கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தொகுதியில் கங்காதரய்யா கவுடா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு காங்கிரஸ் மேலிடம் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இருந்தபோதிலும், சட்டமன்றத் தேர்தலுக்கு அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை முதல் மங்களூரு நகரில் உள்ள அவரது வீட்டிலும் பெங்களூரு நகரில் எலகங்கா பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் பெல்தங்கடியில் அவரது மகன் ரஞ்சன் கவுடா நடத்தி வரும் கல்வி நிலையத்திலும் வருமானவரித்துறை இந்த சோதனையை செய்து வருகின்றனர்.
மேலும், மூன்று இடங்களிலும் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. சோதனையின் போது கோடிக்கணக்கில் ரொக்க பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2018 ஆம் ஆண்டு பாஜக மேலிடம் மீதான தனது அதிருப்தியின் காரணமாக அவர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க } பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்...! தமிழிசை செளந்தரராஜன்...!!
இவ்வாறிருக்க, தற்போது தேர்தல் சமயத்தில் பாஜக வருமானவரித்துறையை பகடைக்காயாக பயன்படுத்தி எதிர்கட்சித் தலைவர்களை மிரட்டி வருவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.
இதையும் படிக்க } பாஜக கோரிக்கை...மனுவை திரும்ப பெற்ற அதிமுக வேட்பாளர்...!