மோதலைத் தடுக்கும் தொழில்நுட்பக் கருவிகள் இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தடுத்திருக்கக் கூடும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்து நடைபெற்ற ஒடிசாவின் பாலசோருக்கு தனி ஹெலிகாப்டரில் மம்தா பானர்ஜி சென்றடைந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்ளை சந்தித்த அவர், கோரமண்டல் சிறந்த ரயில் சேவைகளில் ஒன்று எனவும், 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய விபத்தாக இது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், விபத்தில் உயிரிழந்த மேற்குவங்க மக்களின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிக்க | " ரயில் விபத்திற்கு பராமரிப்பு குறைபாடே காரணம் " - காங். எம்.பி கார்த்தி சிதம்பரம்...!