தொழில்நுட்பம்

அலெக்சாவில் மாற்றம் செய்த அமேசான்! 10 வயது சிறுமிக்கு கொடுத்த சேலஞ்ச் என்ன தெரியுமா?

Malaimurasu Seithigal TV

10 வயது சிறுமிக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய சேலன்ஞ்யை அமேசானின் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் விடுத்ததையடுத்து அமேசான் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

அலெக்சா (Alexa) எனும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள், அதிர்ச்சி தரும் ஒன்றைச் செய்துள்ளது. Amazon நிறுவனத்தின் மென்பொருளான அது, மனிதர்களிடம் பேசக்கூடியது; மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இயல்பாகப் பதிலளிக்கக்கூடியது

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த 10 வயது சிறுமி வீட்டில் பொழுது போகாததால், தனக்கு ஒரு சவாலை விடுமாறு அலெக்சா-விடம் கேட்டுள்ளார். 

அதற்கு பென்னி சேலஞ்ச்' (penny challenge) செய்யச் சொன்னது. 2020 ஆம் ஆண்டில் சமூக ஊடக தளமான Tiktok இல் பென்னி சவால் வெளிவந்தது. இந்த சவாலில், மின் செருகியின் இரு முனைகளிலும் நாணயத்தை வைத்து நாணயத்தைத் தொடும் 
சவால் வழங்கப்பட்டது.

அவ்வாறு செய்தால் மின்சாரம் தாக்கக்கூடும் என்பதால் சிறுமி அதனை செய்ய மறுத்துவிட்டார். கடந்தாண்டு டிக்-டாக்கில் பிரபலாமான இந்த பென்னி சாலஞ்சை (penny challenge) செய்ய முயன்ற பலருக்கு மின்சாரம் பாய்ந்து விரல்கள், கைகள் பாதிக்கப்பட்ட நிலையில் 10 வயது சிறுமிக்கு அலெக்சா இப்படி ஒரு அபாயகராமான சவாலை விடுத்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து சிறுமியின் தாயார் ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், தவறை சரி செய்து, அலெக்சா அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக அமேசான் விளக்கமளித்துள்ளது.