தொழில்நுட்பம்

நிலவை வென்ற இந்தியா: வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்!

Malaimurasu Seithigal TV

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளது. 

சந்திரயான் 2 தோல்விக்குப் பிறகு செய்யப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட விண்கலமாக சந்திரயான் மூன்று கடந்த மாதம் ஜூலை 14ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த முழு திட்டமும் வெற்றி பெறுவதற்கு முக்கிய நிகழ்வான "சாப்ட் லாண்டிங்" என்னும் நிகழ்வு மூலம் வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தறை இறங்கியது.

தென் ஆப்ரிக்காவில் பிரக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்த பிரதமர் மோடி அங்கிருந்து காணொளிக் காட்சி மூலம் விக்ரம் லேண்டர் தரை இறங்குவதை கண்டு களித்தார். சரியாக இன்று  மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டரானது தரை இறங்கியது. இதனை யடுத்து காணொளிக் காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி இந்த வெற்றியின் மூலம் இந்தியா நிலவை வென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

விக்ரம் லேண்டரிடம் இருந்து முதல் தகவல் வந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.