தமிழ் கலைகளையும் கலைஞர்களையும் ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு பங்காற்றி வரக்கூடிய சூழ்நிலையில் மேலும் சில உதவிகளை நாட்டுப்புறக்கலை ஆர்வலர்கள் கோரிக்கையாக விடுக்கிறனர்.
இணையதள பக்கம்:
உலகில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதனின் நாகரிக வளர்ச்சியும் மாறிக்கொண்டே வருகிறது. உள்ளங்கையில் உள்ள கைபேசியின் மூலம் உலகில் அனைத்து தகவல்களையும் நம்மால் பெற முடிகிறது. குறிப்பாக கைபேசியின் மூலமாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கான வாகனங்களை புக் செய்வது வீட்டில் இருந்தபடியே உணவு புக் செய்வது போன்ற எண்ணற்ற தொழில்நுட்பங்கள் பரவி கிடக்கின்றது. இதே வரிசையில் தற்போது தமிழ் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ் கலை டாட் காம் என்ற புதிய தனியார் இணையதள பக்கம் ஒன்று துவங்கப்பட்டு உள்ளது.
மெல்ல மெல்ல..:
தமிழகத்தில் 1042 நாட்டுப்புற கலைகள் இருந்ததாகவும் தற்போது அவை மெல்ல மெல்ல அழிந்து வருவதாகவும் கலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றை மீட்டெடுக்கும் பணிகளும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழ் கலை டாட் காம் என்ற இணையதளம் கலை ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன என்று விளங்குகிறார் இதன் இணை இயக்குனர் கிஃப்டி.
தமிழ் கலை டாட் காம் குறித்து:
இந்தியாவில் தமிழ் கலைஞர்களை ஆன்லைன் மூலமாக புக் செய்வதற்கான தளமாக தமிழ் கலை டாட் காம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுடைய இல்ல நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு எந்த இடத்தில் இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் மொபைல் மூலமாக தமிழ் கலைஞர்களை நேரடியாக புக் செய்து கொள்வதற்கான எளிய வழியாக வருகிறது.
கலைஞர்கள் பல்வேறு இடங்களுக்கு நிகழ்ச்சிகளுக்காக செல்கின்றனர் ஆனால் அதற்கான முழு தொகையும் அவர்களை சென்றடைவதில்லை இடைத்தரகர்கள் மூலமாக சென்று முழு தொகையும் பெற முடியாத பிரச்சனை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அதற்கான மாற்று வழியாக இணையதளம் மூலமாக கலைஞர்களை பதிவு செய்வதால் நேரடியாக கலைஞர்களுக்கான ஊதியம் சென்றடைகிறது இதனால் அந்த உழைப்பின் முழு ஊதியத்தையும் நாட்டுப்புறக் கலைஞர்கள் பெறுவதற்கான சூழல் ஏற்படுகிறது.
தமிழரின் பாரம்பரிய கலைகளில் கரகாட்டம் பறை இசை பொய்க்கால் குதிரை உள்ளிட்ட 30 கலைகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி இந்த இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கலைஞரின் சுயவிவர படம் அவர்களின் வீடியோக்கள் மற்றும் அனைத்து தரவுகளுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும்.
தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகளையும் கலைஞர்களையும் பாதுகாக்கும் இந்த இணையதள பக்கத்தில் அரசுடன் இணைந்து இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
வாழ்வாதாரம்:
நாட்டுப்புற கலைகலையும் கலைஞர்களின் வாழ்வாதாரங்களையும் முன்னேற்றும் விதமாக தொடங்கப்பட்ட இந்த இணையதளம் பொதுமக்களிடம் வெகுவாக சென்றடைந்து நாட்டுப்புறக் கலைஞரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க: கட்டுமான பணிகளில் முறைகேடு... காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது புகார்!!