தொழில்நுட்பம்

சென்னை ஏர் இந்தியா விமானம் திடீரென ரத்து..! காரணம் என்ன..?

Malaimurasu Seithigal TV

சென்னை விமான நிலையத்தில் எர் இந்திய விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யபட்டது. 

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை டெல்லி செல்வதற்கு பயணிகள் விமானமான ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட தயாரானது. இதில் 180 க்கும் மேற்பட்ட பயணிகள் செல்வதற்கு விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர். 

அப்பொழுது, 'ஏர் இந்தியா' விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானி அறிவித்தார். இதனை அடுத்து,  விமானத்தை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஆய்வு செய்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.  

மேலும் பயணிகள் அனைவரையும் விமானத்திற்கு உள்ளேயே அமர வைத்து அவர்களுக்கு தேவையான உணவு உளிட்டவை வழங்கப்பட்டு வந்தனர் இதனை அடுத்து விமானத்தில் இருந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தபோது, தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய முடியாதா நிலை ஏற்பட்டது. 

உடனே,  அதிகாரிகள் டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதனை அடுத்து ஏர் இந்தியா விமானத்தில் இருந்த பயணிகளுக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து கொண்டு இருக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை  விமானி கண்டுபிடித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.