மலேசியாவில் பெய்த மிக கனமழையால் வீடுகளுக்குள் வன உயிரினங்கள் நுழைந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சுமார் 6 மாவட்டங்களுக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் மலேசியாவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஒருசிலர் வீட்டு கூரையின் மீது தஞ்சமடைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை மீட்புப் பணியினர் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.
இந்நிலையில், சாலைகளில் இடுப்பளவு தேங்கிய மழைநீரில் வாகன ஓட்டிகள் தத்தளிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும், வனப்பகுதிகளை ஒட்டியுள்ள வீடுகளுக்குள் பாம்பு, ஆமை, உடும்பு, முதலை உள்ளிட்ட வன உயிரினங்கள் நுழைந்துள்ளதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.