மற்றவை

"வீழ்ந்த நேரத்திலும் எழுச்சி பெற்ற நாடு ஜப்பான்" முதலமைச்சர் பெருமிதம்!

Tamil Selvi Selvakumar

ஜப்பானும், தமிழ்நாடும் ஒரே இலக்கிய கட்டமைப்பை கொண்டவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஜப்பான் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஜப்பான் என்றால் உழைப்பும், சுறுசுறுப்பும் தான் நம் நினைவுக்கு வரும் என்றார். ஏனெனில், வீழ்ந்த நேரத்தில் எழுச்சி பெற்ற நாடு ஜப்பான், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வணிகத்திற்காக தமிழர்கள் ஜப்பான் நாட்டிற்கு வருகை தந்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.

ஜப்பானியர்கள் தமிழ் கற்க முயற்சிப்பதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர், ஜப்பானும் தமிழ்நாடும் ஒரே இலக்கிய கட்டமைப்பை கொண்டவை என்றார். ஜப்பான் தந்த உற்சாக வரவேற்பில் தன்னையே மறந்து போனதாக நெகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர், என்றைக்கும் உங்களில் ஒருவனாக நான் இருப்பேன் என்றார். மேலும், அயலக தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு செய்து வரும் உதவிகளையும் அவர் பட்டியலிட்டார்.

முன்னதாக தமிழர்களின் பாரம்பரிய கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வேட்டி சட்டையுடன் பங்கேற்ற  முதலமைச்சர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.