மற்றவை

அதிகரிக்கும் ஒமிக்ரான் பாதிப்பு...எச்சரிக்கையுடன் இருங்கள்....மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம்....!!

ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் அனுப்பியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

அந்த கடித்தத்தில், டெல்ட்டா வகை வைரஸை விட 3 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸ் கொரோனா தடுப்பு பணிக்கு பெரும் சவாலாக உள்ளது; குறிப்பாக பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அதன் பரவல் விகிதம் தீவிரமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் 19 மாநிலங்களில் 578 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், உலகத்தில் 116 நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்தியா எந்த சூழ்நிலையை சமாளிக்கும் வகையில் தயாராக  வேண்டும், குறிப்பாக மாநிலங்கள் தங்கள் பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களின் மருத்துவ கட்டமைப்பினை பலப்படுத்த வேண்டும், ஆக்சிஜன் மற்றும் தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

"டெஸ்ட்-டிராக்-டிரீட்மெண்ட்" எனும் முறையை கடைபிடிக்க வேண்டும். பரவலை ஆரம்ப கட்டத்திலே கட்டுப்படுத்த மக்கள் கட்டாயம் முக கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும், சமூக பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அக்கடிதத்தில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.