சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஏழு பேரும் சீன நிலையத்தின் டியாங்காங்கில் மூன்று பேரும் புத்தாண்டினை விண்வெளியில் கொண்டாடியுள்ளதாக ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் முதல் முறையாக கொண்டாடப்பட்டதாகவும் அறிவித்தது.
"2022ஆம் ஆண்டு மலர்ந்ததை, பூமிக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் இருந்த பத்து மனிதர்கள்கொண்டாடினார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏழு மற்றும் சீன டியாங்காங் விண்வெளி நிலையத்தில் மூன்று பேர் என மொத்தம் 10 பேர் புத்தாண்டை கொண்டாடினார்கள் என Roscosmos அமைப்பு தனது இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இது சுற்றுப்பாதையில் ஒன்றிணைந்து கொண்டாடிய வரலாற்று சிறப்புமிக்க புத்தாண்டு கொண்டாட்டம். மனிதர்களை ஏற்றிச் சென்ற விண்வெளி ஆய்வில் நிகழ்த்தப்பட்ட சரித்திர சாதனை" என்று ரோஸ்கோஸ்மோஸ் குறிப்பிட்டுள்ளது.ரோஸ்கோஸ்மோஸின் கூற்றுப்படி, கடந்த 21 ஆண்டுகளில் 83 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) புத்தாண்டு கொண்டாட்டத்தை கழித்துள்ளனர், பல விண்வெளி வீரர்கள் வீராங்கனைகள் பல முறை அவ்வாறு செய்துள்ளனர்.