பெங்களூருவில் சஞ்சய் நகர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணா என்பவர் தொழிலதிபராக திகழ்கிறார்.இவரிடம் சந்தோஷ் என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.கிருஷ்ணாவின் உதவியாளராக பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜெஷ் ஷியாம் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து ஈசுவரப்பா மட்டும் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர்கள் மூவரும் ஒரே அறையில் இருந்து வருகின்றனர்.இச்சமயத்தில் ஈசுவரப்பா மீது ராஜேஷ் தண்ணீரை ஊற்றியுள்ளார்.அந்த தண்ணீரானது சந்தோஷ் மீதும் பட்டதாக கூறி சிறிது நேரம் வாக்குவாதம் முற்றியதாக சொல்லப்படுகிறது.
இதில் இருவரும் கட்டி பிடித்து உருண்டியபடி சண்டையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில் திடீரென ராஜெஷ் சந்தோஷின் உதட்டை பிடித்து கடித்ததாக சொல்லப்படுகிறது.இதில் ராஜெஷின் உதடானது துண்டாகி இரத்தம் வந்ததாகவும், உதட்டை துப்பி விட்டு அவர் தப்பியோடியதாக கூறுகின்றனர்.பின்னர் சந்தோஷை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதனுடன் தலைமறைவாக இருந்து வரும் ராஜெஷை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.