புதுச்சேரி திருபுவனையில் அரசின் கூட்டுறவு நூற்ப்பாலை கடந்த 38 ஆண்டுகளாக இயங்கி வந்தது, பஞ்சு விலை ஏற்றம் காரணமாக கடந்த ஆண்டு ஆலைக்கு லே ஆப் அறிவிக்கப்பட்டு ஆலை மூடப்பட்டது.
இந்நிலையில் மூடப்பட்ட ஆலையை மீண்டும் இயக்கக்கோரியும், நிலுவையில் உள்ள தொழிலாளர்களுக்கான சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும், தொழிலாளர் சட்டத்திற்கு விரோதமாக ஆலையை மூடி வைத்துள்ள மேலான் இயக்குனர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும் ஆலை தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில் இன்று காந்தி நகர் பகுதியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க } "கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளை தொடங்குக"
அப்போது அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பிய அவர்கள் ஆலை மூடியதற்கான உத்தரவினை கிழித்து எறிந்தனர். இதனையடுத்து போராட்த்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுகட்டயாமாக கைது செய்து அழைத்து சென்றனர்.
இதையும் படிக்க } தஞ்சையில் மாமன்ற கூட்டத்தின் போது திமுக, அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் இடையே தள்ளு முள்ளு...!