சுற்றுச்சூழல்

திண்டுக்கல் சந்தையில் தக்காளி வரத்து குறைவு: தக்காளி விலை விண்ணை முட்டியது...!

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி வரவு குறைவு காரணமாக 14 - கிலோ கொண்ட பெட்டி ஆயிரத்து 200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

ஒட்டன்சத்திரம், தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி சந்தையில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ள 40 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள விவசாயிகள் இங்கு சந்தைப்படுத்துகின்றனர். இந்நிலையில் தற்போது தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக விண்ணை முட்டும் அளவுக்கு  விலையேற்றம் நிகழ்ந்துள்ளது.

சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 14- கிலோ அடங்கிய தக்காளி பெட்டி, பொதுவாக 5000 பெட்டிகள் வர வேண்டிய நிலையில், தற்போது வரத்து குறைவின் காரணமாக 1000 பெட்டிக்கும்  குறைவாகவே வருகிறது. தக்காளி சாகுபடி தற்போது ஓய்ந்துள்ள நிலையில் குறைவான அளவே சந்தைக்கு  வரத்து வந்து கொண்டிருக்கிறது. 

மேலும், சந்தையில் தற்போது நடைபெற்ற ஏலத்தில் தக்காளி ஏலம் எடுக்க உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் கடும் போட்டி போட்டு கொள்முதல் செய்தனர். இன்று 14 கிலோ கொண்ட பெட்ட அதிகபட்ச விலையாக ரூ.1200க்கும் குறைந்தபட்ச விலையாக 200க்கும் விற்பனையானது. 

மேலும் இதே நிலை இன்னும் 1 - மாதம் தொடரும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தரப்பில் தகவல் கூறப்படுகிறது. மேலும் தற்போது விவசாயிகள் தரப்பில் ஏக்கருக்கு 25 - பெட்டிகள் அறுவடை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஏக்கர் ஒன்றுக்கு 5 - முதல் 6- பெட்டிகள் வரையே அறுவடை செய்யப் படுகிறது.