சுற்றுச்சூழல்

அடுத்த 18 மணி நேரத்தில்,.. வங்கக்கடலில் உருவாக இருக்கும் புயல்..!

Malaimurasu Seithigal TV

மத்திய மேற்கு வங்க கடலில்  மையம் கொண்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவின் பரதீப்பில் இருந்து தெற்கில் சுமார் 430 கி.மீ. தொலைவிலும்,  (மேற்கு வங்கம்) திகாவில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 590 தொலைவிலும் மற்றும் (வங்காளதேசம்) கேபுபாராவில் இருந்து தென்-தென்மேற்கில் 740 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.

பின்பு சற்று வலுகுறைந்து அக்டோபர் 25-ம் தேதி மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தின் கேபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.

புயலாக உருவாக்கும் பட்சத்தில் வட இந்திய பெருங்கடலில் புயலுக்கு பெயரிடும் முறைப்படி ஈரான் நாடு பரிந்துரைத்த Hamoon என பெயர் வைக்கப்பட உள்ளது.