கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

பழங்குடியின மாணவி நீட் தேர்ச்சி: ஊர் மக்கள் கொண்டாட்டம்!

Malaimurasu Seithigal TV

நீலகிரி: நீலகிரியில், பழங்குடியின மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதை ஊர் மக்கள் ஆடி பாடி கொண்டாடியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர்அருகே உள்ள அருவங்காடு பகுதியில் வசிக்கும் நார் சோர் குட்டன், நித்யா தம்பதியரின் மகளான நீத்து சென் (18) இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு எழுதினார். அதன் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. நீத்து சென் 54 சதவீதம் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்று தோடர் பழங்குடியின மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அந்த மாணவிக்கு தோடர் பழங்குடியின மக்களில் முதன் முதலாக நீட் தேர்வில் வெற்றி பெற்று தோடர் பழங்குடியின சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆசி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இது குறித்து மாணவி நீத்து சென் கூறுகையில்:  "ஆரம்பத்தில் கடினமானதாக இருந்தாலும் தேர்வில் வெற்றி பெறுவதே இலக்காக இருந்ததாகவும் தற்போது நிறைவேறியுள்ளதாகவும்" என கூறியுள்ளார்.

மேலும், தனக்கு உடன் பலமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் தனது தாய் தந்தைக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாகவும் வரும் காலங்களில் அனைத்து மக்களுக்கும் மருத்துவம் பாரப்பதாகவும் மற்றும் தான் மட்டுமல்லாமல்  ஒவ்வொருவரும் நன்கு படித்து, அவர்கள் நினைக்கும் பதவியை அடைய வேண்டும், எனவும் கூறியுள்ளார். அதேபோல் மருத்துவராகி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற சிறு வயது முதலான தனது ஆசை தற்போது நிறைவேறியுள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நீத்து சென்-னின் இந்த வெற்றியை அந்த பகுதி மக்கள், தங்களுக்கான வெற்றி போல், ஆடி பாடி ஆரவாரத்துடன் நீத்து சென்னை வாழ்த்தினார்கள்.