1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், காணொளி வாயிலாக அனைத்து படங்களின் கருப்பொருளை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், விளக்கப்படங்களாக உருவாக்கி, ஒரு செயலியின் மூலம் கிடைக்கப்பெறும் வகையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை வடிவமைத்துள்ளது.
1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பாடங்களை காணொலி வடிவத்தில் அளிக்கும் வகையில் மணற்கேணி செயலி திட்டம் இன்று தொடங்கப்படவுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பயிலும் 1 - ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பாடங்களை காணொலி வடிவத்தில் அளிக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான படங்களை 27000 வகை பிரித்து, அவற்றை விளக்கப்படங்களாக உருவாக்கி அளித்திருக்கிறது பள்ளிக் கல்வித்துறை.
இந்த செயலி வெளியீட்டு விழா செங்கல்பட்டு மாவட்டம் சேலையூாில் உள்ள தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது என அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.