கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

"இலவசம் என்ற வார்த்தை கூட பயன்படுத்தக்கூடாது என முதல்வர் என்னிடம் சொன்னார்" - உதயநிதி!

Malaimurasu Seithigal TV

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுக்கு ஊக்கமளித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும், அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட  வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.  நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக 259 மாணவ மாணவியருக்கு ரூபாய் 50 லட்சம் அளவிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

அப்பொழுது மாணவர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று வழங்கப்பட்டிருக்கும் தொகை, பரிசு தொகை அல்ல. இது உங்களுக்கான உரிமைத்தொகை ஆகும். இலவசம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தக்கூடாது என்று முதல்வர் என்னிடம் அறிவுறுத்தி இருக்கிறார், எனப் பேசியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் பிராண்ட் அம்பாசிட்டராக முதலமைச்சர் இருக்கிறார். தமிழகத்தின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகிறது. முதலமைச்சரை போலவே நீங்களும் இந்த மாநிலத்தின் பிராண்ட் அம்பாசிடராக விளங்க வேண்டும், என ஊக்கப்படுத்தியுள்ளார்.

மேலும், மாணவர்கள் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது, என அறிவுறுத்தியுள்ளார்.