கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷனின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை பதவிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா....!!தேர்வுமுறை குறித்து தெரிந்துகொள்ளலாம்...

Malaimurasu Seithigal TV

மத்திய ஆட்சேர்ப்பு நிறுவனமான ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் 2022ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எஸ்எஸ்சி விண்ணப்ப முறை:

விண்ணப்ப செயல்முறை செப்டம்பர் 17, 2022 முதல் தொடங்கப்பட்டு  13 அக்டோபர் 2022 அன்று முடிவடையவுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் பங்கேற்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கூடிய விரைவில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தின் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கடைசி தருணத்தை பயன்படுத்தி, தேர்வர்கள் கமிஷன் மூலம் எடுக்கப்பட்ட மிகப்பெரிய ஆட்சேர்ப்புக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம். ஏறக்குறைய 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பை SSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பார்க்கலாம். 

எந்தெந்த பதவிகளுக்கு உடல் தகுதித் தேர்வு:

எஸ்எஸ்சி நடத்தும் இந்த ஆட்சேர்ப்பில் வெற்றிபெறும் விண்ணப்பதாரர்கள் இந்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் குரூப் பி மற்றும் சி பதவிகளில் நியமிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், இந்த ஆட்சேர்ப்பின் கீழ் சில பதவிகளில் தேர்வு பெற, விண்ணப்பத்தாரர்கள் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகளுடன் உடற்தகுதி தேர்விலும் பங்கேற்க வேண்டும். இதன் கீழ் வரும் இன்ஸ்பெக்டர் (மத்திய எக்சைஸ்/எக்ஸாமினர்/தடுப்பு அதிகாரி), இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் (சிபிஎன்), சப் இன்ஸ்பெக்டர்/ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (என்சிபி) எம்ஹெச்ஏ, சப் இன்ஸ்பெக்டர் (சிபிஐ/என்ஐஏ) மற்றும் யுடிசி (பிஆர்ஓ) ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் உடல் தகுதி தேர்விலும் பங்கேற்க வேண்டும் . 

உடல் தகுதி தேர்வு:

அப்பர் டிவிஷன் கிளர்க் பதவிகளைத் தவிர மற்ற பதவிகளுக்கான உடல் தகுதி தேர்வில் பங்கேற்போர் 15 நிமிடங்களில் 1600 மீட்டர்கள் நடக்க வேண்டும் மற்றும் 30 நிமிடங்களில் 8 கிமீ சைக்கிள் ஓட்ட வேண்டும். மறுபுறம், அப்பர் டிவிஷன் கிளர்க் பதவிகளுக்கான உடல் தகுதி தேர்வில் பங்கேற்போர் 10 நிமிடங்களில் 1000 மீட்டர்கள் நடக்க வேண்டும். இந்த அனைத்து பதவிகளுக்கும் தனித்தனியாக உடல் தரநிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.