மற்றவை

விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு...நடுவானில் பாசிட்டிவ்வான கொரோனா டெஸ்ட்...

விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு நடுவானில் கொரோனா தொற்று உறுதியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

உலக முழுவதும் கொரோனாவில் தொடங்கி டெல்டா, ஒமைக்ரான் என உருமாறி அடுத்தடுத்து புது புது வைரஸ்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. ஆனால், தற்போது மீண்டும் உலக முழுக்க கொரோனா தொற்று தலைதூக்க  ஆரம்பித்துள்ளது என்றே சொல்லலாம்.

உலகம் முழுக்க மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், தினசரியாக 16 லட்சம் என்ற அளவில் உய்ர்ந்து வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 5.6 லட்சம் கேஸ்கள் நேற்று பதிவாகி உள்ளது. இந்தியாவில் தினசரி கேஸ்கள் 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்த நிலையில் தான் பல்வேறு நாடுகளில் விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த மரிசா போட்டியோ என்ற பெண்ணுக்கு நடுவானில் கொரோனா பாசிடிவ் ஆகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிக்சிகனில் விமானம் ஏறிய அந்த பெண்ணுக்கு பாதியில் தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. மேலும், தாங்காத இருமல், வறண்ட தொண்டை ஏற்பட்டதால் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அவர் தனது பேக்கில் ராபிட் டெஸ்ட் கிட் வைத்திருந்ததால் அதை எடுத்துக்கொண்டு உடனடியாக ரெஸ்ட் ரூமில் வைத்து கொரோனா பரிசோதனை செய்துள்ளார். ராபிட் கிட் என்பதால் அவருக்கு உடனே ரிசல்ட் வந்துள்ளது.  அதில் அவருக்கு பாசிட்டிவ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெளியே வந்த அவர் விமானப் பணிப்பெண்களிடம் தெரிவித்துள்ளார். உடனே அவரை தனிமைப்படுத்த முயன்று உள்ளனர். ஆனால் அவரை தனிமைப்படுத்தும் அளவிற்கு காலியான வரிசை கொண்ட இருக்கைகள் இல்லை. அதனால் அவர் தனது இருக்கையிலும் சென்று அமர முடியாது. இந்நிலையில் தன்னால் யாரும் சிரமப்பட கூடாது என்று நினைத்த அந்த பெண் தன்னை ரெஸ்ட் ரூமில் தனிமைப்படுத்தி கொள்ள முடிவு செய்தார். இதனால் அவர் ரெஸ்ட் ரூமில் அமர வைக்கப்பட்டார்.

இது குறித்து மரிசா போட்டியோவிடம் கேட்ட போது, அவர் நான் விமானத்தில் ஏறும் முன் டெஸ்ட் எடுத்துவிட்டுதான் ஏறினேன். அப்போது நெகட்டிவ் என்று வந்தது. ஆனாலும் தொடர்ந்து எனக்கு அறிகுறி இருந்து வந்ததால்  நான் என்னை மீண்டும் டெஸ்ட் செய்தேன். இதில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. அதனால் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.