வடக்கு வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடக்கு வங்கடலின் மத்திய பகுதிகளில் நேற்றைய தினம் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு வங்கக்கடலில் வங்கதேசத்தின் கெபுபராவின் தென்கிழக்கே 200 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்குவங்க மாநிலம் திகாவிலிருந்து 430 கி.மீ கிழக்கு-தென்கிழுக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது.
இதையும் படிக்க : இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி...கோரிக்கை விடுத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்!
இது மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை கெபுபாரா அருகே வங்கதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது..
அதன்பிறகு, இது அடுத்த 24 மணி நேரத்தில் கங்கை மேற்கு வங்கத்தின் குறுக்கே மேற்கு-வடமேற்கு திசையில் நகர அதிக வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.