லைஃப்ஸ்டைல்

கன்னியாகுமரி: விநாயகர் சிலை வைக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு...!

Tamil Selvi Selvakumar

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 நாட்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிப்படவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் அனுமதி கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

செப்டம்பர் 19 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை, பெருந்தெரு, கழுவன்திட்டை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் உள்ள விநாயகர் சிலைகளை செப்டம்பர் 19 முதல் 25 ம் தேதி வரை பூஜை செய்து வழிபட்ட பின்னர், பெருந்தெருவில் இருந்து சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று தாமிரபரணி ஆற்றில் கரைக்கபடும்.

இந்த நிகழ்வை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட கோரி மனு செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது, வழக்கு குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 5 ம் தேதி க்கு தள்ளிவைத்தார்.