லைஃப்ஸ்டைல்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் - உச்சநீதிமன்றம்....!

Malaimurasu Seithigal TV

கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறிய உச்சநீதிமன்றம் இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

சேலம் சுகனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி கடந்த 2018ல் கோயில் நிர்வாக அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதற்கு எதிராக அங்கு பணிபுரியும் குருக்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தீர்ப்பு வழங்கினார்.

தொடர்ந்து மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு,.. நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஸ்வர் மற்றும் பரிதிவாலா அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.