பொழுதுபோக்கு

கோவை ஹேப்பி ஸ்ட்ரீட்டில், ஆடல் பாடலுடன் இளைஞர்கள் உற்சாகம்!!

Malaimurasu Seithigal TV

கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஆடல், பாடல் என சிறுவர்களும், பெரியவர்களும் ​உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆடல்பாடல்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவைகளும் இடம் பெறுகின்றன. அதுமட்டுமின்றி உடற்பயிற்சியும் கற்றுத்தரப்படுகிறது. மேலும் வாரந்தோறும் நடைபெறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில், கோவை மாநகர பகுதிகளில் வசிக்கும் பல்வேறு மக்கள் கலந்துகொண்டு உற்சாகமாக நடனமாடி வருகின்றனர்.

இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடல், பாடலுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கயிறு இழுத்தல், கோலப் போட்டி என பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் யோகா, உடற்பயிற்சிகள், செல்ல பிராணிகள் கண்காட்சி என ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் களைகட்டியது

அதன்படி  சாய்பாபா காலனியில் இந்த வாரமும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு ஆடல் பாடல்கள் என உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும் பல்வேறு பொதுமக்கள் அவர்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து பலூன் பறக்க விட்டு ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை கொண்டாடினர்.